fbpx

அட அந்த நடிகைக்கு 44 வயசு இல்லையாம்பா….! நம்புங்க…..!

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படமாக கலக்கிய சூரிய வம்சம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா. அதன்பிறகு ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே தனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம் சுந்தரா டிராவல்ஸ், நான்தான் பாலா போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார். நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்சமயம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் நடைத்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் பிரசன்னா என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது. அவர் திருமண புகைப்படங்கள் வெளியானதால் 44 வயதில் நடிகையின் திருமணம் என்று செய்திகள் வெளியாகின. தன்னுடைய திருமணம் தொடர்பாக லாவண்யா ஒரு பேட்டியில் தெரிவிக்கும்போது நடிப்பின் கவனம் செலுத்தியதால் திருமணம் அப்படியே தள்ளிப் போய்விட்டது என்று கூறினார்.

அதோடு என்னுடைய குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய பலம். ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வியை நான் சந்தித்ததே இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல தனக்கு 44 வயது ஒன்றும் கிடையாது 43 தான் ஆகிறது என்று தெரிவித்திருக்கிறார் நடிகை லாவண்யா.

Next Post

கவனம்.. மார்ச் 31க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால்.. கூடுதல் வரி செலுத்த வேண்டும்..

Sat Mar 25 , 2023
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு, பான் கார்டுடன் ஆதார் அட்டையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும், பான் கார்டு – ஆதார் அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தவறியவர்கள், […]

You May Like