கோவை மாவட்ட பகுதியில் உள்ள உக்கடத்தில் சென்ற மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது.
இதனை தொடர்ந்து அந்த காரில் பாஸ்ராஸ், குண்டு, ஆணி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனை பார்க்கும் போது இது திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தற்போது கர்நாடாக மாநில பகுதியில் உள்ள மங்களூரில் ஆட்டோ ஒன்றில் குண்டு வெடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை அளித்துள்ளது. விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட மக்கள் விரைந்து வந்து ஆட்டோவில் பிடித்து எரிந்த தீயை உடனே அணைத்தனர். இதில் ஆட்டோ டிரைவரும் மற்றும் ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து இரண்டு பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள், ஆய்வு செய்த போது ஆட்டோவில் ஒரு குக்கர் இருத்தது தெரியவந்துள்ளது. குக்கரில் இருந்த ஒரு மர்ம பொருள் வெடித்து இவ்வாறு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.