fbpx

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்….! எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனு ஏற்கப்பட்டது…..!

அதிமுக பொது செயலாளர் தேர்தலில் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. கடந்த 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ஆகவே சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சென்ற 18ம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமானது. அன்றைய தினமே எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதற்கு நடுவில் இந்த தேர்தலுக்கு பதவிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் நடத்துவதற்கு தடை இல்லை. ஆனால் முடிவை அறிவித்ததற்கு காத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்த உத்தரவை இருதரப்பினருமே வரவேற்று பேசினர்.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்றுக் கொண்டனர். இன்று மாலை 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்பு பெறுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 24ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் முடிவை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் முடிவு எடுத்த உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

Next Post

"500 ரூபாய்கா இந்த அக்கப்போரு......."! பரிதாபமாக உயிரிழந்த 40 வயது நபர்! அண்டை வீட்டுக்காரர் கைது!

Tue Mar 21 , 2023
500 ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் 40 வயது நபர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத் காலணியை சார்ந்தவர்பன்மலி ப்ரமணிக் வயது 40. இவர் தனது அண்டை வீட்டைச் சார்ந்த ப்ரொபிலா ராய் என்பவரிடம் 500 ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். இந்தத் தொகையை அவர் நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தவில்லை என […]

You May Like