அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி குறித்த சட்ட விதிமுறை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் உறுப்பினர் கட்சியில் தொடர்ந்து 10 வருடங்கள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
தலைமை பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5️ வருடங்கள் பணி புரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் உறுப்பினரின் பெயரை கட்சியின் அமைப்பு ரீதியாக இருக்கின்ற மாவட்டங்களில் குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். அதோடு 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான் முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ முடியும். அப்படி என்றால் பொதுச் செயலாளர் அனைத்து ரீதியாக 75 மாவட்டங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் தான் வரும் 26 ஆம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று அதிமுகவின் தேர்தல் ஆணையாளர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் நேற்று அறிவித்திருக்கிறார்கள். வேட்பு மனு தாக்கல் வரும் சனிக்கிழமை ஆரம்பமாகும் எனவும் மனுத்தாக்களுக்கு வரும் 19ஆம் தேதி இறுதி நாள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.