அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஏழாம் தேதி அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு காரணம் எதுவும் தெரிவிக்காமல் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் கூடும் என்று அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதோடு, இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல சேலம் மாவட்டம் ஓமலூர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்