உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் இரண்டு கைப்பிடி கோதுமையை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக ஐஸ்கிரீமை வாங்கி உள்ளார். இதன் காரணமாக, வீட்டில் தாய் தந்தையர் திட்டுவார்கள் என்று பயந்து அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் பவானிபூர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது அங்கு உயிரிழந்த சிறுமி தன்னுடைய குடும்பம் மற்றும் அவருடைய 50 வயது தங்கையுடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது சிறுமி தங்கி இருந்த தெரு வழியாக ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரிடம் இரண்டு கை நிறைய கோதுமையை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக ஐஸ்கிரீமை வாங்கி உள்ளார். அந்த சிறுமி இது தொடர்பாக தெரிந்து கொண்ட அவருடைய தங்கை ஐஸ்கிரீம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
ஆனால் அதற்குள்ளாக ஐஸ்கிரீம் விற்பனையாளர் அந்த பகுதியில் இருந்து சென்று விட்டார். இதன் காரணமாக, கதறி அழுத தங்கை கோதுமை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய பெற்றோரிடம் நீ ஐஸ்கிரீம் வாங்கியதை சொல்கிறேன் என்று கூறியுள்ளார். தன்னுடைய சகோதரியிடம் அதன் பிறகு பெற்றோர்கள் வயல்வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது மூத்த மகள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அதன் பிறகு சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஏ டி சி.பி பிரஜேந்திர திவேதி தெரிவித்ததாவது, உயிரிழந்த சிறுமி இரண்டு கைப்பிடி கோதுமையை விட்டு தனக்காக ஐஸ்கிரீம் வாங்கி உள்ளார். இதனை கவனித்த அவருடைய தங்கை பெற்றோரிடம் புகார் தெரிவிப்பதாக மிரட்டி இருக்கிறார். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் இந்த தற்கொலை நடைபெற்று இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.