கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்ட்ரோ (29) கிறிஸ்துவ பாதிரியாரான இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்கரையில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் தேவாலயத்திற்கு வருகை தரும் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கினர்.
மாணவி ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் வழங்கியிருந்தார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அந்த பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துற ையினர் செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், பாதிரியாரின் மடிக்கணினியை கைப்பற்றிய காவல் துறையினர் அதை ஆய்வு செய்த போது ஆபாச வீடியோக்கள் மற்றும் பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தனர். இவற்றில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டிருந்தனர். அவற்றை கைப்பற்றும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் பாதிரியாரை கைது செய்ய காவல்துறை தரப்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், அந்த பாதிரியார் நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை முதல் அவருடைய கைபேசி சிக்னலை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அவர் நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் உள்ள வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவே தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பாதிரியாரை கைது செய்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கின்ற சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்பான விபரமும் அவரிடமிருந்து பெறப்பட்டது. பின்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.