fbpx

உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட முதியவர்; 40 வயது பெண்.. முதியவர் மரணம் காரணம் என்ன..?

மும்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உல்லாசமாக இருந்த 61 வயது முதியவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறினர். மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இறந்தவர் தனது காதலன் என்று அவருடன் இருந்த 40 வயது பெண் கூறியுள்ளார். புறநகர் குர்லாவில் இருக்கும் ஹோட்டலுக்கு அந்தப் பெண்ணுடன் காலை 10 மணி அளவில் முதியவர் சென்றார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் ஹோட்டலின் வரவேற்பறையைத் தொடர்புகொண்டு, முதியவர் மயங்கி விழுந்துவிட்டதாக தெரிவித்தார்.

ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் முதியவரை சியோனில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் முன்பே இறந்துவிட்டதாக சொன்னதாக குர்லா காவல் நிலைய அதிகாரி கூறினார். அதன் பிறகு அந்த பெண்ணை குர்லா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அந்த நபர் வொர்லியில் வசிப்பவர் என்றும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் என்றும் அந்த பெண் காவல்துறையினரிடம் கூறினார்.

உடலுறவின் போது, ​​அவர் மது அருந்தினார். ஆதனால் அவர் மயங்கி விழுந்தார் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் விபத்து இறப்பு என்று அறிக்கை பதிவு செய்து இருக்கிறோம். மேலும் மரணத்திற்கான சரியான காரணத்தை தெரிந்து கொள்ளவும், செயலுக்கு முன் அவர் ஏதேனும் மாத்திரையை சாப்பிட்டாரா, என்பதைக் கண்டறியவும் அவரது மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.

Baskar

Next Post

டிசம்பர் 31-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை ரத்து செய்தால் ரூ.1,000 பிடித்தம்...! அனைத்து கல்லூரிகளுக்கும் அதிரடி உத்தரவு...!

Tue Aug 16 , 2022
அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் வெளியேறினால், மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்வதற்காக தற்போது பயிலும் நிறுவனங்களிலிருந்து வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் அக்கல்வி நிறுவனங்கள் மாணவருக்கு […]

You May Like