fbpx

குடிநீர் குழாயுடன் சாலை அமைத்த ஒப்பந்ததாரருக்கு குவிந்த பாராட்டுக்கள்… குடிநீர் பிடிக்க முடியாத சந்தோஷத்தில் பெண்கள்..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தெக்களூர் பகுதியில் 30-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் பைப் லைன் அமைத்து தெரு பைப்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பழங்குடியினர் நலத்துறை மூலம் தெக்களூர் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கி சாலை அமைக்கும் வேலை நடந்து வருகிறது. இந்நிலையில் வீடுகளுக்கு அருகில் இருந்த பொது தெரு குடிநீர் குழாய் சிமெண்ட் சாலை அமைக்கும் போது ஒப்பந்ததாரரின் மெத்தன போக்கால் குடத்தில் தண்ணீர் பிடிக்க முடியாதவாறு மூடி சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது.

இதனால் அந்த தெருவில் குடியிருக்கும் பெண்கள் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பெண்கள் ரோடு போட்ட ஒப்பந்ததாரரை செகண்ட் மேனிக்கு திட்டி வருகின்றனர். மேலும் அவர்கள் பழையபடி குடிநீர் பிடிக்க இதை சரிசெய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rupa

Next Post

பிரபல தயாரிப்பாளரை மறுமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி..! திருப்பதியில் டும் டும் டும்..!

Thu Sep 1 , 2022
பிரபல நடிகையும், விஜேவுமான மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர், நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கி நிலையில், சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ’வாணி ராணி’ சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு […]

You May Like