fbpx

பெற்ற மகளையே!!… பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன் கைது..!

மேட்டுப்பாளையம் காரமடை ரோடு பகுதியில் உள்ள ஒருவர் மெக்கானிக்காக லாரி ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டாவது மகளான 16 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கோபித்து கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வீட்டில் தந்தையும் மகளும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது அவர், பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் காலையில் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மகளை மிரட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதை தொடர்ந்து சிறுமிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தந்தையை கைது செய்தனர். கைதான அவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.!

Rupa

Next Post

தமிழக அரசுக்கே டஃப் கொடுக்கும் இளைஞர்கள்... டோர் டெலிவரி செய்த சாராய வியாபாரிகள்..!

Mon Aug 22 , 2022
கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் கிராமத்தில் வீடு வீடாக சென்று சாராயம் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் சோதனை செய்தனர் அப்போது அவர்கள் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தொியவந்தது. காவல்துறையினர் விசாரணையில் அவர்கள் கல்வராயன்மலை கொட்டப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த […]

You May Like