fbpx

திருச்சியை சேர்ந்த இளம் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச்சென்ற அசாம் மாநில இளைஞர் அதிரடி கைது….! திருச்சி காவல்துறையினர் நடவடிக்கை…..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள நொச்சியம் பகுதியில் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் சினேகா( 22) கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கின்ற பழமுதிர் கடையில் பணியாற்றி வந்திருக்கிறார். அதே கடையில் பணியாற்றி வந்த அஸ்ஸாமை சார்ந்த காதர் அலி (22) என்பவர் சினேகாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய நிலையில், காதர் அலி சினேகாவிடம் ஆசைவார்த்தை தெரிவித்து அவரிடம் உல்லாசமாக இருந்திருக்கிறார். இதில் கர்ப்பமான சினேகா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதர் அலியை வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் காதர் அலி சினேகாவிடம் சொல்லாமல் அசாம் மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு தப்பிச் சென்று விட்டார்.

இதன்காரணமாக, சினேகா மன்னச்சநல்லூர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக அசாம் மாநிலத்தை சேர்ந்த காதர் அலி என்பவர் ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிவிட்டார் என்று புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து காதர் அலியை காவல்துறை தீவிரமாக தேடி வந்தது.

காவல்துறை தேடுதல் வேட்டையில் ஒரு வருடத்திற்கு பின்னர் அவர் சொந்த கிராமத்தில் உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அசாம் மாநிலத்திற்கு சென்று காதர் அலியை கைது செய்து மன்னச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு அவரை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

குடும்ப தலைவிக்கு ரூ.1000 திட்டம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? நாளை வெளியாக உள்ள அறிவிப்பு..

Sun Mar 19 , 2023
திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் படி, […]

You May Like