பொருளாதார பரிவர்த்தனைக்கு பான் கார்டு மிகவும் அவசியம் என்று கூறப்படுகின்ற நிலையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு எண் பான்கார்டு எண் என்றும் சொல்லப்படுகிறது. இதன் உதவியோடு பொதுமக்கள் சுலபமாக பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு உரிய காலக்கெடு இந்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய விதிகளின் அடிப்படையில் உங்களுடைய பான் கார்டு எண்ணையும், ஆதார் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும்.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் படி இரண்டும் இணைக்கப்படவில்லை என்றால் அவர்களின் பான் கார்டுகள் செயலிழந்து விடும் இதன் காரணமாக நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாது. அபராதம் செலுத்தாமல் இரண்டையும் இணைக்கும் காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது மக்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க முடியும்.