தமிழ்நாட்டில் நடப்பாண்டு வழக்கத்தை விடவும் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது.
ஆகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது.
இத்தகைய நிலையில், நாதமிழகத்தில் எதிர்வரும் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சித்திரை முடிவடையுள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறைந்தபாடில்லை.
இத்தகைய நிலையில், எதிர்வரும் 5 தினங்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரையில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு, சென்னையில் வெப்பம் 40 டிகிரி வரையில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.