fbpx

BigBreaking……இன்னும் சற்று நேரத்தில் சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ள முதலமைச்சர் ஸ்டாலின்…..!

நாட்டில் உள்நாட்டு நிலக்கரி விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முழுமூச்சுடன் செய்து வருகிறது. அதற்காக தமிழகம், பீகார் அசாம் போன்ற ஒரு சில மாநிலங்களில் புதிய நிலக்கரி சுரங்கங்களை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான இடங்களையும் மத்திய அரசு தேர்வு செய்து விட்டது.

அந்த வகையில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், அரியலூர், போன்ற பகுதிகளில் புதிய நிலக்கரியை சுரங்கங்களை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது என்பது இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியான டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்களை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று எதிர்க்கட்சியான அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆளும் கட்சியை கேட்டுக் கொண்டிருக்கின்றன.

அதற்கு ஆடம்பரப்பும் மத்திய அரசிற்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என்று உறுதியுடன் தெரிவித்து இருக்கிறது. இதற்கான பதிலை சமீபத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்திருந்தார். அதுவும் நேற்று இதற்கு பதில் கூறிய அவர் நாளை இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை சட்டசபையில் வெளியிடுவார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் நிலக்கரி இடுப்பு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுகிறது அதாவது, திமுகவைச் சார்ந்த டிஆர்பி ராஜா, அதிமுகவை சார்ந்த அருண்மொழி தேவன் உள்ளிட்டோர் தீர்மானம் கொண்டுவர இருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து ஒரு புதிய அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.

Next Post

அதிகரிக்கும் கொரோனா.. வழக்கறிஞர்கள் காணொளி மூலம் ஆஜராகலாம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு..

Wed Apr 5 , 2023
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராகலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.. கொரோனா முதன்முதலில் பரவத்தொடங்கிய போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.. ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.. அந்த வகையில் நீதிமன்றங்களிலும் காணொளி வாயிலாக விசாரணை நடைபெற்று வந்தது.. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் முழுமையாக காணொளி வாயிலாக விசாரணை […]

You May Like