fbpx

குழந்தைகளுக்கு அதிக அளவு பரவும் ப்ளூ காய்ச்சல்!,. தமிழகத்தில் ஒரே மாதத்தில் 8 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகமானோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் அதிகமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சென்னையில் இருக்கும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

மேலும் தனியார் ஹாஸ்பிடலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்புளுவன்சா காய்ச்சலுக்கு கடந்த ஒரு மாதத்தில் எட்டு பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 819 பேர் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 282 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். நோய் பாதிப்பை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Rupa

Next Post

இளம்பெண் தற்கொலை வழக்கில் கோர்ட் அதிரடி: கணவருக்கு பத்து ஆண்டுகள் ஜெயில் தண்டனை.!

Thu Sep 15 , 2022
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (32). இவர் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் லட்சுமி பிரசன்னா(26) என்பவருக்கும் கடந்த 2012-ஆம் வருடம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இவர்கள், சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர். திருமணத்தின்போது குமாரசாமிக்கு வரதட்சணையாக, 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 ஏக்கர் நிலம் ஆகியவை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

You May Like