fbpx

பள்ளிகளில் காலை உணவு திட்டம்…..! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு…..!

தமிழ்நாட்டில் காலை உணவு சாப்பிடாமல் சில மாணவர்கள் பள்ளிக்கு வந்து விடுகிறார்கள் ஆகவே அவர்கள் பசியில் வாட கூடாது என்பதற்காக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல் படுத்தி வருகிறது, அதில் ஒன்றுதான் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்.

இந்த நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த திட்டம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி அனைத்து மாணவர்களும் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும், பள்ளியில் மாணவர்களின் வருகை அதிகரித்தல், அதோடு கல்வியை தக்க வைத்துக் கொள்ளுதல், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பாதிக்கப்படாமல் இருத்தல் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Next Post

மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை வழங்குவதற்கு தனி இணையதளம்….! ஆணையம் அதிரடி….!

Sat Apr 22 , 2023
கலாஷேத்ரா கல்லூரியில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாணவிகள் புகார் வழங்குவதற்கு புதிய வசதி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதற்கான விசாரணை ஆணையம். அதன்படி மாணவிகள் https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் புகார் வழங்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் அமைத்த 3️ பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் கூறியுள்ளார். அதேபோல மாணவிகள் வழங்கும் புகார்கள் குறித்த தகவல்கள் யாரிடமும் பகிரப்படாமல் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறியுள்ளார். எந்தவித […]

You May Like