கன்னியாகுமரியில் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பாதிரியார் மீது 5️ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்துள்ள பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆண்ட்ரோ (29) அழகிய மண்டபம் அருகே விளங்கலையில் இருக்கும் தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பதைப் போன்ற வீடியோ மற்றும் உரையாடல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கிய புகாரில், தேவாலயம் சென்றபோது பெனடிக் அண்ட்ரோ பாலியல் தொல்லை வழங்கியதாக தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாதிரியாருடன் தான் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன, அதனை நீக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இத்தகைய நிலையில், பாதிரியார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களிடம் ஆபாசமாகவும், அவதூறாகவும் நடந்து கொள்ளுதல், சமூக வலைதளங்களை தவறான வழியில் பயன்படுத்துதல் போன்ற 5 பிரிவுகளின் கன்னியாகுமரி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
பாதிரியார் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தைரியமாக புகார் வழங்கலாம் என்றும், அவர்கள் வழங்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.