fbpx

இன்று கரையை கடக்கிறது மோக்கா புயல்…..! தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த அதிதீவிர புயலான மோக்கா மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை அதிதீவிர புயலாக கடக்கலாம். அப்போது மணிக்கு 150 முதல் 160 கிலோமீட்டர் ரகத்திலும் இடையிடையே 175 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதே போல நாளை மறுநாளும், வரும் 17ஆம் தேதியும் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். ஓரிரு பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. வெப்பநிலை 82 லிருந்து 100 டிகிரி பாரன்ஹீட் என இருக்கும்.

இந்த நிலையில், நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் முள்ளங்கினாவில் 6 சென்டிமீட்டர் மழையும், குறுந்தன் கோடு, தக்கலை போன்ற பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழை துறையாறையில் 4 சென்டிமீட்டர் மழை, அணைக்கடங்கு நாகர்கோவில் கோழி போர்விளையில் தலா 3 சென்டிமீட்டர் மழை உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் தமிழக, இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீச கூடும், அதோடு வடகிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 220 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். புயல் கரையை கடக்கும் போது 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும், சூறாவளி காற்று வீச கூடும். ஆகவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Next Post

திருப்பதி கோவிலுக்குள் சென்று விதியை மீறி வீடியோ எடுத்த நபர் அதிரடி கைது…..! வெளியான பரபரப்பு தகவல்கள்…..!

Sun May 14 , 2023
நாட்டில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்குதான் நாட்டிலேயே அதிக அளவிலான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட எல்லோரின் உடமைகளும் மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் […]

You May Like