தலைநகர் சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், மெட்ரோ பயணிகளில் மாணவர்களின் பங்கு 40 சதவீதமாக இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அரசு பேருந்துகள் மற்றும் தொடர் வண்டிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர இலவச பாஸ் போல மெட்ரோ பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் வசதிக்காக சலுகை விலை பாஸ் மிக விரைவில் வழங்கப்படும் எனவும் முதலில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.