fbpx

சாலை விபத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தை.. தாய் பரிதாப சாவு..!

உத்திரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் அருகில் உள்ள தனவ்லா பகுதியில் வசித்து வரும் ராமு என்பவர், அவருடைய மனைவி காமினியுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது கிராமப்புற வழியாக சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று இவர்களின் பைக் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த காமினிக்கு அதிர்ச்சியில் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் காமினி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், காமிணி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் அவருக்கு 8 மாதத்திலேயே பிரசவமான பெண் குழந்தை நல்ல முறையில் உள்ளது. இருந்தாலும் குழந்தையின் தாய் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். மேலும் காமினியின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை விரைவில் பிடித்து விடுவோம் என்றும், அருகில் உள்ள சிசிடிவி புட்டேஜில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்த உலக வங்கியின் அறிக்கையின் படி, உலகிலேயே சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1,50,000 பேர் இறக்கின்றனர்.

Baskar

Next Post

சிலிண்டர் விலை உயர்வு..! திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பரபரப்பு பதில்..!

Mon Jul 25 , 2022
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ரமேஸ்வர் டேலி பதிலளித்துள்ளார். சமையல் எரிவாயு விலை கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 144 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வருவாய் குறைவாக உள்ளவர்களுக்கு நடுத்தர மக்களுக்கும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 2 சமையல் எரிவாயு […]
சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! ’ஒரு மாதத்திற்கு 2.. ஆண்டுக்கு 15’..!! வெளியான அறிவிப்பு..!!

You May Like