திண்டுக்கல் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் சென்ற மாதம் பழிக்குப்பழியாக ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்குமார்( 29), விக்னேஷ் (33) உதித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுத்தப்பட்டு விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சமயத்தில் இவர்கள் 2 பேர் கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டதன் காரணமாக, யுவராஜ்குமாரும், விக்னேஷும் சிகிச்சைக்காக சென்ற மாதம் 22 ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் இத்தகைய சூழ்நிலையில், சின்னத்தம்பி கொலை சம்பவத்திற்கு பழிக்கு, பழி வாங்கும் விதமாக இரண்டு கார்களில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இரவு திடீரென்று விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தது.
மருத்துவமனையில் 4வது தளத்தில் சிகிச்சையில் இருந்த யுவராஜ் குமார் மற்றும் விக்னேஷ் உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டமிட்ட அந்த மர்ம கும்பல் அவர்கள் இருந்த வார்டுக்குள் நுழைந்தது. அப்போது அங்கே துப்பாக்கியுடன் காவலில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜ் உள்ளிட்டோர் முகத்தில் அந்த மர்ம கும்பல் மிளகாய் பொடி தூவி இருக்கிறது. அதன் பிறகு யுவராஜ் குமார் மீதும், விக்னேஷ் மீதும் மிளகாய் பொடி தூவி அந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளது.
இதனை கவனித்த அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து அலரி அடித்துக் கொண்டு ஓட தொடங்கினர். இதன் பிறகு சுதாரித்துக் கொண்டு எழுந்த காவலர்கள் அந்த மர்ம கும்பலை சுடுவதற்கு துப்பாக்கியை வைத்து கூறிப் பார்த்தனர். அப்போது காவலர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதன் காரணமாக, விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பரபரப்பு உண்டானது.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கே காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் காயமடைந்த யுவராஜ் குமாரும், விக்னேஷும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாக்குதலுக்கு ஆளான காவலர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாவட்ட எல்லை பகுதிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.