fbpx

பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை…. பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க வேண்டும்… சீமான்.!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளது;-
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகில் கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் நான்கு வயது பெண்குழந்தை ஒன்று அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.

தாய்வழிச்சமூகமாக விளங்கி பெண்களுக்கு முதன்மைத்துவம் வழங்கி போற்றிக் கொண்டாடிய தமிழ்ச்சமூகத்தில், பெண் பிள்ளைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்ற இன்றைய கொடும் நிலையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன். குற்றச்சமூகமாக மாறிப்போன இச்சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது. அரிதினும் அரிதான வழக்குகளில் வழங்கப்படும் மரணத்தண்டனையை பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கான தண்டனையாக வரையறுத்து, அதற்கென தனிச்சட்டமியற்றி, தண்டனைகளைக் கடுமையாக்குவதே இந்த மாதிரியான குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான ஒரே வாய்ப்பாகும்.

எனவே, இக்குற்றச் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியரான காமராஜை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும், கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உச்சபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தகுந்த மருத்துவச் சிகிச்சை அளித்து, உளவியல் சிகிச்சையும் அளித்து, மீண்டுவர அரசு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Baskar

Next Post

#HappyBirthdayU1..! 'இதயத்தின் வலிகளை தொலைக்கச் செய்த இசைக்கு இன்று பிறந்தநாள்..!

Wed Aug 31 , 2022
இசையில் இளைஞர்களின் போதை மருந்தாக கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையாமல் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவுக்கு பின்னணி இசையானது ஒரு நல்ல படத்திற்கு முக்கியமானது. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை இயக்குநர் பாரதிராஜாவின் வார்த்தைகளிலேயே நாம் புரிந்து கொள்ளலாம். பாரதிராஜா கொடுத்த வெற்றிப் […]
#HappyBirthdayU1..! 'இதயத்தின் வலிகளை தொலைக்கச் செய்த இசைக்கு இன்று பிறந்தநாள்..!

You May Like