நாட்டில் நோய் தொற்று நிலவரம் தொடர்பாக நாள்தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்றைய தினம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அது தொடர்பான அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்திற்கு புதிதாக 756 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,49,86,,461 இன்று அதிகரித்திருக்கிறது. அதோடு நோய் தொற்று காரணமாக, ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 5,31,832 என அதிகரித்து இருக்கிறது.
மேலும் மருத்துவமனைகளில் இருந்து ஒரே நாளில் 1,308 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,44,46,514 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து இருக்கின்றனர். நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,115 ஆக குறைந்திருக்கிறது.