fbpx

நோய் தொற்று பயத்தால் 3️ வருடங்களாக வீட்டுக்குள் முடங்கிய தாய் மகன்……! போராடி வெளியே அழைத்து வந்த காவல்துறையினர்…….!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் தொடங்கிய நோய் தொற்று பரபல் அதன் பிறகு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.

இந்த நோய் தொற்று பரவல் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் நோய் தொற்று பரவல் குறைந்து இருந்தாலும் இன்றளவும் இந்த நோய் தொற்று பரவலின் அச்சம் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில், ஹரியானா மாநிலத்தில் குருகிராமில் இருக்கின்ற மாருதி கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுஜன் மஜி கடந்த 2020 ஆம் வருடம் நோய் தொற்று பரவிக் கொண்டிருந்த சமயத்தில் இவருடைய மனைவி முன்முன் தன்னுடைய 10 வயது மகனுடன் வீட்டுக்குள் முடங்கினார்.

வரும்போது நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் முன் முன் தானும் வெளியே வரவில்லை, தன்னுடைய மகனையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதோடு வேலைக்கு சென்று வரும் கணவர் சுஜனை கூட வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை. ஆகவே அவர் வீட்டிற்கு அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

மனைவி மற்றும் மகனுடன் வீடியோ கால் மூலமாக சுஜன் பேசி கொண்டு இருக்கிறார். மனைவி மற்றும் மகனுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சுஜன் வாங்கி வீட்டின் கதவருகே வைத்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. நோய் தொற்று அபாயம் குறைந்துவிட்டது என்று அறிவுறுத்தியபோதும் கூட முன்முன் வீட்டை விட்டு வெளியே வர மறுத்து விட்டார். அதோடு மகனுடன் 3 வருடங்களாக ஒரே வீட்டிற்குள் முடங்கி இருந்திருக்கிறார்.

வேறு வழி இல்லாமல் சுஜன் காவல்துறையிடம் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினரும் சுகாதாரதுறையை சார்ந்தவர்களும் செவ்வாய்க்கிழமை சுஜன் வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று சுஜனின் மனைவி மற்றும் மகனை மீட்டு வெளியே அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் தான் முன்முன் தங்களை வெளியே அழைத்துச் சென்றால் குழந்தையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக காவல் துறையினர் கூறுகிறார்கள். வீட்டை பார்வையிட்ட குழந்தைகள் நலக்குழுவை சார்ந்தவர்கள் 3️ வருடங்களாக சேர்ந்த குப்பைகள் அறை முழுவதும் விரைந்து கிடந்ததை பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

”ஐபிஎல் ஏலத்தில கூட இவ்வளவு விலைக்கு போகல”..!! TNPL-இல் அதிக விலைக்குப் போன சென்னை வீரர்..!!

Fri Feb 24 , 2023
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7-வது சீசன், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஏலம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. முதல் வீரராக ஏலம் விடப்பட்ட விஜய் சங்கரை ரூ.10.25 லட்சத்திற்கு […]
”ஐபிஎல் ஏலத்தில கூட இவ்வளவு விலைக்கு போகல”..!! TNPL-இல் அதிக விலைக்குப் போன சென்னை வீரர்..!!

You May Like