கடலூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த எலி என்ற கிருஷ்ணமூர்த்தி இந்த நிலையில், ஜோசப்( 18) என்ற இளைஞருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண்ணுடன் பேசி பழகுவது குறித்து இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணுடன் பேசிய வீடியோவை டிக் டாக்கில் பதிவிடுவது குறித்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 4ம் தேதி ஜோசப் வீட்டை விட்டு வெளியே சென்று அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பவே இல்லை என்று சொல்லப்படுகிறது.
ஆகவே இது குறித்து ஜோசப்பின் தாயார் வழங்கிய புகாரின் அடிப்படையில் கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அவருடைய செல்போனில் கடைசியாக பேசிய விஜய், பிரபாகரன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் விசாரணையில், ஜோசப்பை கழுத்தை அறுத்து கொலை செய்து காரைக்காடு பகுதியில் உள்ள உப்பனாற்றில் அவருடைய சடலத்தை புதைத்ததாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த தகவலின் அடிப்படையில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஜோசப்பின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடைய நண்பரான விஜயிடம் விசாரணை நடைபெற்றபோது இந்த உண்மை அனைத்தும் தெரிய வந்திருக்கிறது ஆகவே இந்த மோதல் காரணமாக ஜோசப்பின் கொலை நடைபெற்றுள்ளது என்பது தெளிவானது.
மேலும் இந்த கொலையில் தொடர்புள்ள 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 7வது குற்றவாளியான எலி என்ற கிருஷ்ணமூர்த்தி(28) இவர் கடலூர் பகுதியில் இருக்கின்ற சிப்காட் அருகே ஈச்சங்காடு கிராமத்தைச் சார்ந்தவர், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் தான் கிருஷ்ணமூர்த்தி நேற்று அவருடைய வீட்டின் அருகில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரித்த காவல்துறையினர் ஜோசப் கொலையில் இருந்த முன் விரோதம் காரணமாக, இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.