fbpx

சொந்த வீட்டில் சிறுமிக்கு நடந்த கொடுமை; துணிந்து சிறுமி செய்த காரியம்…!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கும் ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி, தனது தாய், அண்ணனோடு வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு சிறுமியின் தாய் 31 வயதான டிரைவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர் சிறுமிக்கு வளர்ப்பு தந்தை முறையாக இருந்தாலும் நீண்ட நாட்களாக சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தாய்மாமனான 37 வயதான கொத்தனாரும் சிறுமியிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என இருவரும் சிறுமியை மிரட்டி உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனக்கு நடந்த கொடுமையை பற்றி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு அந்த சிறுமியும் அவரது தாயாரும் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்பு தந்தை மற்றும் தாய்மாமன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Rupa

Next Post

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா நியமனம்..!

Wed Sep 7 , 2022
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அறிவிக்கப்பட்டார். அவர் பிரதமரானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை […]
இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா நியமனம்..!

You May Like