fbpx

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை….! மன உளைச்சலால் எடுத்த விபரீத முடிவு….!

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளரின் மகளான மாணவி நிஷா மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்விற்கு தன்னை தயார்படுத்தி வந்தார். சென்ற வருடம் நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அதே போல இந்த வருடமும் நீட் தேர்வு எழுதுவதற்காக அவர் காத்திருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையம் ஒன்றில் அவர் தீவிரமாக பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று மாலை வடலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலையை வைத்து மாணவி நிஷா தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரி தேர்தலில் குறைந்த அளவிலான மதிப்பின் பெற்றதால் அந்த மாணவி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்று சொல்லப்படுகிறது.

Next Post

CRPF-ல் 1.30 லட்சம் கான்ஸ்டபிள் காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க.. விவரம் உள்ளே..

Thu Apr 6 , 2023
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 1.30 லட்சம் கான்ஸ்டபிள்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎஃப் மூலம் மொத்தம் 1,29,929 இடங்கள் நிரப்பப்படும், அவற்றில் 1,25,262 ஆண்களுக்கும், 4667 பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. CRPF இல் ஆட்சேர்ப்புக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான crpf.gov.in இல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது CRPF கான்ஸ்டபிள் பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது crpf.gov.in என்ற […]

You May Like