fbpx

காதல் திருமணத்தால் ஏற்பட்ட விபரீதம்…..! மருமகனை படுகொலை செய்த மாமனார் கிருஷ்ணகிரியில் பயங்கரம்……!

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (28) இவர் டைல்ஸ் வேலை பார்த்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே இருக்கின்ற முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காதலித்து கரம்பிடித்தார். இத்தகைய நிலையில், இந்த காதல் திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆகவே நேற்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலை பார்ப்பதற்காக காவேரிப்பட்டணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார் அப்போது ஜெகனை வழிநடத்த அவருடைய மாமனார் ஷங்கர் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்ளிட்டோம் ஜெகன்மீது கத்தியை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கே விரைந்து வந்து பார்த்தபோது ஷங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் தப்பித்துச் சென்று விட்டனர் தகவல் அறிந்து காவேரிப்பட்டணம் காவல்துறையை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஜெகனின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்களும் உறவினர்களும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்தோடு சாலை மறியலிலும் ஈடுபடத் தொடங்கினர்.

ஆகவே கிருஷ்ணகிரி, தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது இதனை எடுத்து கிருஷ்ணகிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழரசி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சராஜ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறவினரிடம் சமாதானம் பேசினர். ஆகவே உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையைச் சார்ந்தவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றன.

Next Post

நாளை மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க...!

Wed Mar 22 , 2023
நாளை சென்னை தி.நகரில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் நாளை மாலை 4 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், […]
இந்திய அஞ்சல் துறையில் 60,000 காலியிடங்கள்..? தீயாய் பரவும் செய்தி உண்மையா..?

You May Like