பொதுவாக திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் திமுக என்றால் ரவுடிசம், ரவுடிசம் என்றால் திமுக என்ற வாக்கியத்தை தங்களுடைய அடைமொழியாக அதிமுக வைத்திருந்தது. அதற்கேற்றார் போல திமுக செய்யும் ஒவ்வொரு செயலும் இருந்தது.எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்படி என்றால் தற்போது திமுக ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறது அப்படி என்றால் கேட்கவா வேண்டும்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ரமேஷ் மற்றும் அவருடைய எதிர் வீட்டுக்காரர் இளங்கோவன் உள்ளிட்டோருக்கிடையிலான பிரச்சனையில் இளங்கோவுக்கு ஆதரவாக இடங்கணசாலை நகராட்சியின் 20 வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் குமார் கூலிப்படையினருடன் சென்று ரமேஷின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திருக்கிறார். இதில் ரமேஷின் விரல்கள் முறிந்து தலையில் பழுத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து மகுடஞ்சாவடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.