அதீத வெயிலுள்ள சமயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வது அசௌகரித்தை ஏற்படுத்தலாம். என தெரிவித்திருக்கின்ற சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சாந்திக்கும் பகுதி நிலவுகின்றது இதன் காரணமாக, இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரையில் தமிழக மற்றும் புதுவை காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசாந்து முதலும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளது.
அதேபோல் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் சமயத்தில் நேரடி வெயிலில் செல்வது குழந்தைகள் முதியவர்கள் மற்றும் உடல் நல பாதிப்பு இருப்பவர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக, சோர்வு மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.