fbpx

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்….! தபால் வாக்கை பதிவு செய்த காவல்துறையினர்….!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென்று மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அங்கே தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் இருக்கின்ற சூழ்நிலையில் இதற்கான பிரச்சாரமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக வின் கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவரும் மறைந்த பெருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதேபோல அதிமுகவின் சார்பாக கே.எஸ் தென்னரசு போட்டியிடுகின்றார். பன்னீர்செல்வம் தரப்பு மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வேட்பாளர்கள் போட்டியிடாத நிலையில், இரட்டை இலை வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை தவிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேனகா என்ற இளம் பெண் போட்டியிடுகிறார். இவர்களை தவிர்த்து தேமுதிகவின் வேட்பாளர் ஆனந்த் களத்தில் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த இடைத்தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்சமயம் 58 காவலர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.

Next Post

உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள்.. அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்..

Tue Feb 21 , 2023
வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதால், பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், காலநிலை மாற்றம் முன்னெப்போதையும் விட இப்போது பேராபத்தாக மாறியுள்ளது.. எனவே நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை காணும் முன், உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் இருக்கும் 50 மாகாணங்களில் 80% […]

You May Like