fbpx

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…..! வெற்றி யாருக்கு……?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினராக திருமகன் ஈவேரா இருந்து வந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆகவே இந்த இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களும், அதிமுக கூட்டணியின் சார்பாக கே எஸ் தென்னரசு அவர்களும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேனகா நவநீதன் அவர்களும் மற்றும் தேமுதிக சார்பாக ஆனந்த் ந்த் உட்பட சுயேட்சைகளுடன் 77 பேர் களத்தில் இருந்தார்கள்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பரப்பரைக்காக ஆயிரக்கணக்கான அரசியல் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் ஈரோட்டில் முகாமிட்டு இருந்தார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில், இடைத்தேர்தலுக்காக 52 வாக்கு மையங்களும், 238 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் தலா 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விதம் சுமார் 1430 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இடைத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தனர். இதனை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சித்தோட்டில் இருக்கின்ற அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 2 அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டிருக்கின்றன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டனர். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டு வருகின்றனர். 15 சுற்றுகள் வரையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

Next Post

சின்னத்திரையிலும் கால் பதித்தார் நடிகர் ராமராஜன்…..!

Thu Mar 2 , 2023
கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, அம்மன் கோவில் வாசலிலே என பல்வேறு திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களிடையே முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை அவரே இயக்கியும் இருக்கின்றார். கடந்த பல வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி இருந்த அவர் தற்சமயம் சாமானியன் என்ற திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. […]
ஆயிரம் கோடி கொடுத்தாலும்...! தரம் கெட்டவன் நான் இல்லை..! - நடிகர் ராமராஜன்

You May Like