fbpx

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்….! வெற்றி வாய்ப்பு யாருக்கு…?

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பின்னர் மார்ச் மாதம் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.இங்கு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதன் பின்னர் அதிமுகவின் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி திறப்பு வேட்பாளரான கே.எஸ். தென்னரசு போட்டியிடுகின்றார். இதுவாக நாம் தமிழர் கட்சியின் சார்பாகவும் தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். அதிமுகவின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவின் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதன் பின்னர் நாம் தமிழர் கட்சிக்கு ஓரளவு கணிசமான வாக்குகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக சர்ச்சையான விதத்தில் கருத்து கூறி சிக்கிக்கொண்டதால் தற்போது வாக்குகள் சரியலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேமுதிகவை பொறுத்தவரையில் விஜயகாந்துக்கு அங்கே ரசிகர்கள் அதிகம் என்று கூறப்படுவதால், குறைந்தபட்சம் 3,000 முதல் 5000 வாக்குகள் வரையில் தேமுதிகவிற்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் கணிசமான அளவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக அந்த வாக்குகளை இழப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Next Post

மக்களே கவனம்..!! வாட்டி வதைக்கும் வெயில்..!! வெப்ப அலை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!

Mon Feb 20 , 2023
குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சல், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தியாவில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 5 முதல் […]

You May Like