fbpx

ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் மீது பொறுப்பு இருக்கிறது.. யோகி ஆதித்யநாத் பேச்சு..!

உத்தரபிரதேசத்தில் ஊர்க்காவல் படையினரால் நடத்தப்பட்ட திரங்கா மார்ச் இருசக்கர வாகன பேரணியின் நிறைவு விழாவில் அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியது:-

வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட முயற்சி என்பது முக்கியம். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை விட சமூகம் முக்கியம் என்ற உணர்வுடன் நாம் அனைவரும் பணியாற்றும்போது, ​​​​இந்தியா உலகின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் மீது பொறுப்பு இருக்கிறது. நம்முடைய இருப்பிடமும் நமது அடையாளமும் நம் நாட்டினால் தான். நமது நாடு பாதுகாப்பாக இருந்தால் மட்டும்தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

கொரோனா காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. அவரது தலைமையில் கீழ் சுகாதார துறை பணியாளர்கள், நிர்வாகம், காவல்துறை மற்றும் ஊர்க்காவல்படையினர் தங்கள் பணியினை சிறப்பாக செய்து சரியான முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர். பிரதமர் அடுத்த 25 வருடங்களுக்கு ஒரு ‘அமிர்த காலத்தை’ நம் முன் வைத்துள்ளார். வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவுக்கு, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Rupa

Next Post

’வருவாயை விட டீசல் செலவே அதிகம்’..! அரசுப் பேருந்து சேவைகள் நிறுத்தம்..! பயணிகள் அவதி

Sun Aug 14 , 2022
கடன் சுமையால் கேரள பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால், கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாயை விட டீசல் செலவு அதிகரித்து வருவதால், நீண்ட தூர சேவைக்கான பேருந்துகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவை பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. கடன் சுமையால், […]

You May Like