சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர் நெஞ்சுவலி காரணமாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு லேசான நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்தது. இந்த சூழ்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கிறது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
சென்ற வாரம் இ வி கே எஸ் இளங்கோவனை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பேசிய மருத்துவர்கள் அவர் உடல் நலம் சீராக இருப்பதாகவும் மிக விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.