fbpx

பசுமாடுகளுக்காக விவசாயி அடித்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம்… போலீசார் விசாரணை..!!

மைசூருவில் இருக்கும் தூரா கிராமத்தில் வசித்து வருபவர் சோமண்ணா (50). இவர் ஒரு விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மூன்று பசுமாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் சோமண்ணா வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது சோமண்ணா அங்கிருந்த ஒரு விவசாய நிலத்தில் இறந்து கிடந்தார்.

அவரது பசுமாடுகளை காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து ஜெயப்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சோமண்ணாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மாவட்ட அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் யாரோ மர்ம நபர்கள், சோமண்ணாவை அடித்து கொலை செய்துவிட்டு மூன்று பசுமாடுகளையும் திருடிச் சென்றிருக்கலாம் என்று கூறுகின்றனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

கத்தாரில் பள்ளி பேருந்தில் தூங்கிய சிறுமி... கவனிக்காமல் பேருந்தை பூட்டியதால் உயிரிழந்த பரிதாபம்..!

Wed Sep 14 , 2022
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் செங்கனசேரியை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ, சவும்யா தம்பதியினர், கத்தாரில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு, நான்கு வயதில் மின்ஸா மரியம் ஜேகப் என்ற மகள் இருக்கிறார். கத்தாரின் அல் வாக்ராவில் இருக்கும் ஆரம்ப பள்ளியில் படித்து வந்த இவர், செப்.11-ஆம் தேதி காலை பள்ளிக்கு பஸ்ஸில் சென்றார். போகும் வழியில் பஸ்ஸிலேயே துாங்கிவிட்டார். இந்நிலையில், பள்ளி வந்ததும் மற்ற மாணவ – மாணவியர் இறங்கி […]

You May Like