fbpx

நியூசிலாந்து காவல்துறையில் முதல் இந்திய பெண்: சமூக அர்ப்பணிப்பு எண்ணத்தால் சேர்ந்ததாக பெருமிதம்..!

கேரள மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் அலீனா அபிலாஷ் (22). இவர் நியூசிலாந்து நாட்டின் காவல்துறையில் சேர்க்கப்பட்ட முதல் மலையாளி பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் நியூசிலாந்து காவல் படையின் கீழ் முதல் பதவியான கான்ஸ்டபிள் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்லாந்து மாகாணத்தில் பதவி கிடைத்துள்ளது.

அலீனாவின் சாதனையை அறிந்த பாலாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எம்.எல்.ஏ மணி, சி.கப்பன் மற்றும் எம்.பி ஜோஸ் கே.மணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவரது பெற்றோர் அபிலாஷ் செபாஸ்டியன் மற்றும் பாபி ஆகியோர் நியூசிலாந்து நாட்டில் உள்ள பால்மர்ஸ்டன் நார்த் பகுதியில் வசித்து வருகின்றனர்.

ஆறாம் வகுப்பு வரை கேரள மாநிலம், பாலாவில் பள்ளிப்படிப்பை முடித்த அலீனா தனது பெற்றோருடன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். நியூசிலாந்தில் நாட்டில் இருந்து முறையான பள்ளிக்கல்வியை முடித்த பிறகு, ஒடாகோ பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் குற்றவியல் படிப்பைத் தொடர்ந்தார். இதனையடுத்து, ராயல் நியூசிலாந்து காவல்துறையினருக்கான கல்லூரியில் காவலர்களுக்கான பயிற்சியில் சேர்ந்து, அங்கிருந்து பட்டம் பெற்றார்.

இது குறித்து அலீனாவின் கூறியதாவது,  என்னுடைய சமூக அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதில் எனக்கு இருந்த ஆர்வமே என்னை இந்த வேலையை தேர்ந்தெடுக்க வைத்தது. என்று கூறினார். இவரது இளைய சகோதரர், வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

டெண்டர் முறைகேடு..! எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு..!

Fri Jul 1 , 2022
மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை, […]
’மத்திய அரசு சொல்லும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா’..? எஸ்.பி.வேலுமணி காட்டம்

You May Like