மதுரையை சேர்ந்த நஸ்ரத் அஷ்ரப் என்பவர் சென்னை நுங்கம்பாக்கம்ஸ்டெர்லின் சாலையில் இருக்கின்ற தனியார் கல்வி ஆலோசனை மற்றும் சேவை நிறுவனம் மூலமாக ரஷ்யாவில் இருக்கின்ற ஆர்மீனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யா சென்றுள்ளார் கல்வி கட்டணமாக, சம்பந்தப்பட்ட கல்வி ஆலோசகர்கள் ரூபாய் 10 லட்சத்தை முன்பணமாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தில் கல்வி கட்டணம் முழுவதையும் கட்டி விடுவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் முதல் தவணை கல்வி கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு நடுவில் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் இரண்டாவது தவணை கட்டணத்தை கட்ட வேண்டும் என்று அந்த இளைஞரை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
ஆனாலும் அந்த மாணவர் தரப்பில் யாரும் கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வி ஆலோசகர்கள் கல்விக்காக பணம் பெற்று கட்டாமல் அதனை ஏமாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆகவே அந்த மாணவரால் ரஷ்யாவில் கல்வியை தொடர இயலவில்லை.
இதனை தொடர்ந்து அவர் சென்னை திரும்பி சம்பந்தப்பட்ட தனியார் கல்வி ஆலோசனை மற்றும் சேவை நிறுவனம் நிர்வாகிகளிடம் கட்டிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்காமல் விரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் அதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆகவே கல்வி ஆலோசனை மற்றும் சேவை நிறுவனம் நடத்தி வரும் புதுவையை சேர்ந்த ஏஞ்சலா பெணடிக்ட்( 36) என்பவர் சென்னை செனாய் நகரை சேர்ந்த பிரேம்நாத் (32) உள்ளிட்ட இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர் அதன் பிறகு அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்த நிலையில் அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.