சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல நாளை முதல், வரும் 20ம் தேதி வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது