வழக்கமாக ஏப்ரல், மே உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் விடுமுறையும் விடப்பட்டு விடுவதால் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்குவார்கள் அங்கு சென்று விடுமுறையை கழித்து அதன் பிறகு கோடையின் வெப்பம் சற்று தணிந்த பிறகு சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக வீடு திரும்புவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அந்த வகையில், நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் கனமழை பெய்தது ஆகவே கடுமையான குளிர் நிலவியதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்ல இயலாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆகவே வெள்ளி நீர்வீழ்ச்சி போன்ற பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அத்துடன் மழையின் காரணமாக, பல்வேறு மரக்கலைகள் முறிந்து மின்சார வயர்கள் மீது விழுந்ததன் காரணமாக அங்கே மின்தடை ஏற்பட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இது தொடர்பாக அறிந்து கொண்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வயர்களை சீரமைத்த பின்னர் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.