fbpx

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை……! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை……!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவில் வருகிறது ஆகவே தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கனமழையும், 14 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு, கோவையில் ஒரு சில பகுதிகளிலும், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் போன்ற பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Next Post

புரட்டி எடுக்கும் கனமழை..!! தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட வார்னிங்..!! இந்த லிஸ்ட்டில் உங்க மாவட்டமும் இருக்கா..?

Tue May 2 , 2023
கோடை காலத்திற்கு இடையில் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் இன்று அதிகாலை தீவிர கனமழை பெய்தது. திடீரென்று 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மாலையும், இரவும் கோடை மழை பெய்தது. சென்னையில் நேற்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. 9 மணிக்கு தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு […]

You May Like