தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மாலை 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன் அடிப்படையில், பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.