மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சோமார். இவரது இரண்டாவது மனைவி ஆதினபீபி சேக் (31). இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், மும்பைக்கு வேலை தேடி கடந்த மாதம் 28-ஆம் தேதி வந்தனர். மும்பை ஜோகேஸ்வரி மேற்கு பெக்ராம் பாக் பகுதியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.
இதற்கிடையில் கணவர் சோமாருக்கு அவரது சொந்த கிராமத்தில் வேலை கிடைத்தது. இதனால் தனது மனைவியிடம் அவரது சொந்த ஊருக்கு போகலாம் என்று அழைத்தார். இதற்கு அவருடைய மனைவி மறுத்ததால்,இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி இரவு தன்னுடன் வர மறுத்த மனைவியை சோமார் கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றார்.
இதில் படுகாயம் டைந்த ஆதினபீபி சேக்கை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 25 தையல் போடப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த அம்போலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோமாரின் மனைவியிடம் விசாரித்தனர். மேலும் அவர் அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சோமாரை ரெயில் மற்றும் விமான நிலையங்களில் தேடினர். மேலும் செல்போன் சிக்னல் மூலம் லோயர்பரேலில் பதுங்கி இருந்த சோமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.