fbpx

காவிரியில் சட்டவிரோத மணல் குவாரிகளா….? அருகில் தாக்கம் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை…..!

கரூரை சேர்ந்த சாமானிய மக்கள் நல கட்சியின் தலைவர் குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனதில் கரூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதியில் ஆற்றுப்பொடுகையில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு அந்தப் பகுதியில் சீமை கருவேல புதர்கள் நிரம்பி காப்பி மணல் திட்டுகளாக மாறி இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ராட்சத இயந்திரங்களை கொண்டு மணல் அல்லப்படுகிறது. இதன் காரணமாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மணல் அரிப்பு உண்டாகி நாமக்கல் கரூர் ரயில்வே மேம்பாலம், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பாலங்களின் அடித்தளங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், பி புகழேந்தி உள்ளிட்டோரின் அமர்வில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசு வழக்கறிஞர் வாதம் செய்கையில் கரூர் ஆற்றில் மணல் குவாரிகள் அரசு விதிமுறைகளின் படியே நடைபெற்று வருகின்றன. மாதம் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு வழிமுறைகளை பிறப்பித்து குவாரிகள் கண்காணிக்கப்படுகின்றன என்று கூறியிருக்கிறார். ஆகவே நீதிபதிகள் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Next Post

இனி பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் தூய்மைக்காக நேரம் ஒதுக்க வேண்டும்.. டெல்லி அரசு அதிரடி உத்தரவு..

Wed Mar 29 , 2023
தூய்மை மற்றும் பசுமையான சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது வாரத்தின் கடைசி வேலை நாளில் பள்ளிகளில் ‘ஷ்ரம்தான் நேரத்தை’ (தாமாக முன்வந்து தூய்மை நடவடிக்கையை மேற்கொள்ளுதல்) ஏற்பாடு செய்யுமாறு டெல்லி அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் அந்தந்த பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த கூட்டு முயற்சி அனைத்து பங்கேற்பாளர்களிடையே […]

You May Like