தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே சித்திரை மாதம் பிறந்த நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த விதத்தில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 16 மாவட்டங்களில் 100 டிகிரி பாரான்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோடு மதுரை விமான நிலையம் போன்ற பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. வேலூர் திருச்சி கரூர் போன்ற மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.
அதேபோல சென்னை மீனம்பாக்கம், மதுரை நகரம், சேலம் மற்றும் திருத்தணி போன்ற பகுதிகளில் 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. அதோடு கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருப்பத்தூர் போன்ற பகுதிகளிலும் 101 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. புதுவையில் முதல் முறையாக நேற்று 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.