தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு சற்றே மெத்தனமாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் மாநில அரசு நோய் தொற்று பாதிப்பு மாநிலத்தில் கட்டுக்குள் இருப்பதாக அறிக்கை வழங்குவது வருத்தம் தரும் விஷயமாக இருக்கிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோய் தொற்று சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். சமீப காலமாக நோய் தொற்று எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அதே அளவிற்கு நோய் தொற்று மரணமும் ஏற்படுகிறது. ஆனாலும் மாநில அரசு நோய் தொற்றின் வீரியம் குறைந்து வருவதாக தெரிவித்து வருகிறது.