மும்பை இந்தியன்ஸ் அணியின் மதிப்புமிக்க வீரராக உள்ளார் இஷான் கிஷன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ipl சீசனின் போது 35 லட்சத்திற்கு குஜராத் லயன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய திறமையான ஆட்டத்தின் காரணமாக இவருடைய டிமாண்ட் ஐபிஎல் சீசனில் அதிகரித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பிறகு மும்பை அணியில் தன்னுடைய மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரது விலை கிடு கிடுவென அதிகரித்தது.
டி20 கிரிக்கெட் அதிரடி மன்னனாக வலம் வருகிறார் சூரியகுமார் யாதவ். டிவில்லியர்ஸ்க்கு பின்னர் மிஸ்டர் 360 என்று ரசிகர்கள் இவரைத்தான் அழைக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரையில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் சூரியகுமார் யாதவ். இவர் தன்னுடைய முதல் சீசனில் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 8 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது.
இந்த பட்டியலில் அடுத்ததாக இடம் பிடித்திருப்பது லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டன் கே எல் ராகுல் இவரை பெங்களூர் அணி முதலில் 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால் தன்னுடைய அபாரமான ஆட்டம் காரணமாக, தன்னுடைய மார்க்கெட்டை மேலும் அதிகரித்தார் கே எல் ராகுல். தற்போது லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் இவரை 17 கோடி ரூபாய் கொடுத்து அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அத்துடன் மட்டுமல்லாமல் இவர் இந்திய அணியிலும் இடம் பிடித்து இருக்கிறார்.
ராஜஸ்தான் அணியில் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சஞ்சு சாம்சன். ஐபிஎல் தொடரில் இவருடைய ஆரம்ப விலை 8 லட்சம் ரூபாயாக இருந்தது அதன் பிறகு தன்னுடைய அதிரடி ஆட்டம் காரணமாக, இவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கிறார் t20 கிரிக்கெட்டின் இவர் என்னதான் திறமையாக விளையாடினாலும் இந்திய அணியில் இவரால் இடம் பிடிக்க முடியவில்லை. ராஜஸ்தான் அணி இவரை 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
தல தோனியின் போர்வாள் சென்னை அணியின் ஸ்டார் கிரிக்கெட்டெர் என்றெல்லாம் அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜா இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான இவர் இந்திய அணியின் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். கடந்த 2008 ஆம் வருடம் ராஜஸ்தான் அணி இவரை வெறும் 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால் தற்போது தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மற்றும் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி இவரை 16 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது.