சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசாநகர் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக காசாவின் தெற்கு பகுதியில் இருக்கின்ற கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது.
சென்ற செவ்வாய்க்கிழமை முதல் இரவு, பகலாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தலைவர்கள் 2 பேர் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு, 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சுமார் 10 பேர் சாதாரண குடிமக்கள் எனவும், இந்த நடவடிக்கை எந்த காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக கண்டித்து இருக்கிறது. தன்னுடைய தரப்பின் தவறுகளில் இருந்து இஸ்ரேல் தப்பிக்க முயற்சி செய்வதாக பாலஸ்தீன தலைவர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.