fbpx

ஆண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆண்கள் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் எந்த நாட்டில்..?

ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எரித்திரியா அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி இருக்கும் நாடு எரித்திரியா. சிறிய நாடான இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகிறது.

இந்த நாடு தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து வருகிறது. எனவே ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. எனவே பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் இல்லை. இதனால் அந்த நாட்டில் பல பெண்கள் திருமணம் செய்யாமலேயே காலத்தை கழிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும், அது குற்றமாக கருதப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கணவரின் முதல் மனைவி இந்த இரண்டாவது திருமணத்தை எதிர்க்கக் கூடாது என்றும் அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை அளிக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டத்தால் அங்கு வசிக்கும் ஆண்கள் மிகவும் சந்தோஷப்படுவதாக கூறப்படுகிறது.

Rupa

Next Post

மதுக்கடைகள் இல்லாத மாநிலமாக மாறுமா தமிழகம்..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Wed Aug 10 , 2022
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே போதைப்பொருள் பழக்கம் அதிகரிக்க காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருளை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மலைப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக […]

You May Like