தமிழ்நாடு சிறைத்துறை, திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறை-2ல் காலியாக உள்ள சமூக வழக்கு பணி நிபுணர்கள் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.10.2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக சிறைத்துறை காலிப்பணியிடங்கள்: Social Case Work Experts பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆண், பெண் ஆகிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்புபவருக்கு 18 நிறைவடைந்து இருக்க வேண்டும். அதிகபட்சம் SCA-37, SC-37, ST-37, MBC-35, BC-35, OC-32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Post Graduate Degree in Social Work or Social Service or Social science or Criminology or Sociology or Andragogy (Adult Education) or A degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology or Any other Degree with Diploma in Social work or Social Service or Social Science or Criminology or Sociology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழக சிறைத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மேற்குறிப்பிடபட்டுள்ள வகுப்பினர் கீழ்க்கண்ட முகவரிக்கு கீழ்க்காணும் ஆவணங்களின் நகல்களுடன் 07.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அன்று மாலை 5.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவண நகல்கள்:
1. கல்வி சான்றிதழ்
2.சாதி சான்றிதழ்
3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று
4. ஆதார் அட்டை
5. முன் அனுபவ சான்று
முகவரி: சிறை கண்காணிப்பாளர், புழல், சென்னை – 6, தொலைபேசி எண்- 044 26590312/318.
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/09/2022092446.pdf
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/09/2022092366.pdf
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/09/2022092345.pdf